தண்டவாள விரிசல்: ஈரோடு-கோவை ரயில் தப்பியது
ஈரோடு: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஈரோடு-கோவை பாசஞ்சர் ரயில் விபத்திலிருந்து தப்பியது.
பனிக்காலங்களில் ரயிர் தண்டவாளங்களில் அடிக்கடி விரிசல் ஏற்படுவது வழக்கமாகும். ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை அடிக்கடி கண்காணித்து சரிசெய்து வருகின்றனர். அதேப்போல ஈரோடு மாவட்டம், ஈங்கூர் ரயில் நிலையத்தில் இருந்து விஜயமங்கலம் வரை ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஈங்கூர் அருகே தண்டவாளத்தில் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளும், நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இநநிலையில் காலை 7.25 மணிக்கு அந்த வழியில் ஈரோடு-கோவை பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் விரைவாக தண்டவாளத்தை சரி செய்தனர். இதையடுத்து ரயில் புறப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications