மணல் திருடினால் குண்டாஸ் பாயும்: துரைமுருகன் எச்சரிக்கை
சென்னை: மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி பெற்று இரண்டாம் விற்பனை என்ற பெயரில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால்தான் முறைகேடுகள் நடக்கின்றன. தவறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ பேசுகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீராமச்சந்திராபுரத்தில் சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தினமும் 400 முதல் 500 மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துச் செல்கின்றனர். அதற்காக ஒரு வண்டிக்கு ரூ.40 மட்டுமே கட்டணமாக கொடுக்கின்றனர். ஆனால், இவர்கள் சொந்த உபயோகத்துக்கு அல்லாமல், உள்ளூர் பிரமுகர் ஒருவரது இடத்துக்கு கொண்டு போய் மணலை கொட்டுகின்றனர்.
இரண்டாம் விற்பனை என்ற பெயரில் கோர்ட் உத்தரவைப் பெற்று கொண்டு, அந்த மணலை ரூ.2,000க்கு விற்கின்றனர். இது தவிர, உள்ளூர் தாதாக்கள் ஒரு வண்டிக்கு ரூ.10, ரூ.20 என தண்டல் வேறு வசூலிக்கின்றனர். எனவே, சொந்த பயன்பாட்டுக்கு மணல் எடுத்து வெளியில் விற்கும் மாட்டு வண்டியினர் மற்றும் உள்ளூர் விற்பனையாளர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், முந்தைய திமுக ஆட்சியில், ஏல முறையில் மணல் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.29 கோடி தான் வருவாய் கிடைத்தது. அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்கவே, அரசே மணல் விற்பனையை ஏற்று நடத்த ஜெயலலிதா முடிவு செய்தார். இதனால் மணல் விற்பனையில் கிடைத்த வருவாய் ரூ.148 கோடியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு பொதுப்பணித் துறைக்கான கொள்கைக் குறிப்பில், அரசு மணல் விற்க தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.446.31 கோடி வருவாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006-07ம் ஆண்டில் ரூ.128.11 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், அதிமுக ஆட்சியில் 2 ஆண்டுகள் ஐந்து மாதங்களில் ரூ.318 கோடி வருவாய் கிடைத்திருப்பது தெளிவாகிறது. தற்போது, தேனி மாவட்ட எல்லை, நெல்லை மாவட்ட எல்லை வழியாக கேரளாவுக்கு மணல் கடத்தப்படுகிறது என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில், ஒரு கிலோ மணல் கூட வெளி மாநிலங்களுக்கு போகவில்லை என்பது போலவும், திமுக ஆட்சியில்தான் வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது போலவும் கூறுகிறார். இதை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சில இடங்களில் தவறுகள் நடக்கின்றன. ஆனாலும், கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் வருவாய் அதிகரித்துள்ளது. தவறு நடக்கவில்லை என்று கூறமாட்டேன். அப்படி தவறு செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், கேரளாவில் ஒரு பொட்டு மணல் கூட எடுக்க அனுமதிப்படுவதில்லை. இரவு நேரத்தில் கேரளா எல்லையை கண்காணித்தால் தெரியும், நமது வருங்கால சந்ததியினரை பாதிக்கும் வகையில் இயற்கை வளம் இங்கே கொள்ளை போய் கொண்டிருக்கிறது என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், மணல் கொள்ளை கடந்த ஆட்சியைத் தொடர்ந்து இப்போதும் ஜோராக நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இது மிகவும் வேதனையளிக்கிறது என்றார்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள்











Click it and Unblock the Notifications