ரூ.2 கோடியில் சுற்றுலாத் தலமாகும் துவரங்காடு
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் சிற்றாறு கால்வாய் அணைக்கட்டு அமைந்துள்ள துவரங்காடு பகுதியை ரூ.2 கோடி செலவில் சுற்றுலா தலமாக்க அரசு தீர்மானித்துள்ளது. அங்கு படகு குழாம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ளது துவரங்காடு கிராமம். இங்கு சிற்றாறு கால்வாய் அணைக்கட்டு உள்ளது. விடுமுறை நாட்களில் இந்த அணைக்கட்டு உள்ள பகுதிக்கு மக்கள் அதிகளவில் வருகின்றனர். இதையடுத்து துவரங்காட்டை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரி வந்தனர்.
இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் ராமாத்தாள் முத்தையாசாமி இதுகுறித்து கலெக்டர் பிரகாஷிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி செல்லப்பா, பொதுப்பணி துறை உதவி பொறியாளர் மணிகண்டன், யூனியன் ஆணையாளர் ஆமினாள் பீவி, பொறியாளர் குமரேசன் ஆகியோர் அணைகட்டு பகுதிகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சுற்றுலா துறை அதிகாரி செல்லப்பா கூறுகையில், இப்பகுதியை சுற்றுலாதலமாக்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இப்பகுதியை சுற்றுலாதலமாக்க ரூ.2.10 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ரூ.70 லட்சம் வீதம் 3 கட்டங்களாக இப்பணிகள் நடைபெறும்.
இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். இங்கு அணையிலிருந்து உபரிநீர் அருவிபோல் விழுகிறது. எனவே மக்கள் குளிப்பதற்கு தேவையான வசதி, படகு குழாம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, குடிநீர், கழிப்பறை மற்றும் மின் வசதிகள் செய்யப்படும் என்றார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications