பேராசிரியர் லோகநாதன், 32 மாணவர்கள் கொலை: ரூ.44 கோடி இழப்பீடு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்கடன்: அமெரிக்காவின் வெரிஜீனியா பல்கலைக்கழத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக பேராசிரியர் லோகநாதன் மற்றும் இந்திய மாணவர் உள்பட 32 பேரின் குடும்பத்துக்கு ரூ.44 கோடி நஷ்டஈடு வழங்க வெர்ஜீனியா மாநில அரசு முன்வந்துள்ளது.

அமெரி்க்காவின் வெர்ஜீனியா பல்கலை மாணவர் விடுதிக்குள் கடந்த 2007 ஏப்ரல் 16ம் தேதி சோ செங்-ஹியூயி என்ற 23 வயது சீன மாணவன் 2 கைகளிலும் துப்பாக்கியுடன் சென்று எதிர்ப்பட்டவர்களையெல்லாம் சரமாரியாக சுட்டான். இதில் 3 பேர் பலியாயினர்.

பின்னர் பல்கலைக்கழக சிவில் என்ஜினியரிங் பிரிவு வகுப்பறைக்குள் நுழைந்தான். அப்போது பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் லோகநாதன் மற்றும் அங்கிருந்த மாணவர்களை நோக்கி சுட்டான். இதில் பேராசிரியர் லோகநாதன் மற்றும் 29 மாணவர்கள் குண்டுபாய்ந்து அதே இடத்தில் இறந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த சீன மாணவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தான்.

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றிவந்தார். அவரோடு இந்திய மாணவர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்த நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் வெர்ஜீனியா மாநில அரசு நஷ்ட ஈடு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ரூ.44 கோடி வழங்கப்படும். இது தவிர காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான சலுகைகள், பண உதவி அல்லாத உதவிகள் அளிக்கப்படும். இதற்குப்பதிலாக, மேலும் நஷ்டஈடு கேட்டு வெர்ஜீனியா அரசு மீது வழக்குத் தொடரப் போவதில்லை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+