மணமேடையில் மாப்பிள்ளை திடீர் மாயம் - கல்யாணம் நின்றது!
கோவை: கோவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை திடீரென மாயமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன். ஒரு ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அதே தெருவை சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்
இருவரும் வேறு வேறு ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் தங்களது வீட்டினரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு சம்மதம் பெற்றனர்.
இதையடுத்து பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் மாப்பிள்ளை ரவிச்சந்திரன் அதி காலையில் பாத்ரூம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் முகூர்த்த நேரம் முடியும் வரை வரவில்லை. இதையடுத்து கல்யாணம் நின்று போனது.
மாப்பிள்ளை திடீரென மாயமானதால் பெண் வீட்டார் பெரும் அதிர்ச்சியும், கல்யாணம் நின்றதால் பெரும் சோகமும் அடைந்தனர்.
இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் மீது போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது ரவிச்சந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடனும் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்பு இருந்தது தெரிய வந்தது. எனவே அப்பெண்ணுடன் அவர் ஓடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications