நெல்லை, குமரியில் கன மழை: 2 பேர் பலி
சென்னை: நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு 2 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. இதில் நெல்லை மாவட்டம் வடகரை கிராமத்தில் சுவர் இடிந்து கந்தன் என்கிற 71 வயது முதியவர் பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கிராமத்தில் மின்னல் தாக்கி 16 வயது ரிக்சன் பலியானான். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, கன்னியாகுமரியில் உள்ள ஐந்து கிராமங்களில் மழை காரணமாக பரவிய மர்மக் காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்னல் தாக்கி 5 பேருக்கு கண், காது பாதிப்பு
மானூர் அருகேயுள்ள கரம்பையை சேர்ந்தவர் அப்பாத்துரை. விவசாயி. இவரும், இவரது மனைவி அன்னபுஷ்பம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலர் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. உடனே அவர்கள் அங்குள்ள ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பலத்த இடியுடன் மின்னல் தாக்கியது. இதில் அப்பாத்துரை, அன்னபுஷ்பம் அதே பகுதியை சேர்ந்த மல்லிகா, தங்கலெட்சுமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.
உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை பாளை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்னல் மற்றும் இடி தாக்கியதில் சிலருக்கு காது, கண் பாதிப்படைந்துள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications