டெல்லி தமிழ் சங்கத்துக்கு இடம் மாறும் திருவள்ளுவர் சிலை

இதுகுறித்து டெல்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த பல ஆண்டுகளாக டெல்லி ராமகிருஷ்ணபுரத்தில் தமிழ் சங்க மார்க்கில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை கவனிப்பாரின்றி, மிகப் பரிதாபமான நிலையில் இருந்தது. ஒரு பொதுக் கழிப்பறையின் எதிரில் இருக்கும் இந்தச் சிலையை யாரும் நெருங்க முடியாத வண்ணம் மிகவும் அசுத்தமான சூழ்நிலையில் அமைந்து இருந்தது, அந்தச் சிலை.
இந்த சிலையை சரியான வகையில் பராமரிக்கும் வண்ணம் டெல்லி தமிழ் சங்க வளாகத்தில் இடம் மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை டெல்லி தமிழ் சங்கம் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 1ம் தேதி டெல்லி தமிழ் சங்க விழாவுக்கு வந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், தமிழ் புத்தாண்டுக்குள் ஆவன செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
அதே போல தமிழக முதல்வர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரிடமும் மனுக்கள் அளிக்கப்பட்டன. டெல்லி முதல்வரிடமும் மீண்டும் மனு அளித்தோம்.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பிக்களுக்கு இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டது. கட்சி வேறுபாடின்றி அனைத்து எம்.பிக்களும் டெல்லி முதல்வருக்கு தங்கள் சிபாரிசை அனுப்பி வைத்தனர்.
தமிழக முதல்வரும் இந்த விஷயத்தில் தீவிரமான அக்கறையும், ஆதரவும் காட்டினார்.
இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக, இப்போது டெல்லி அரசு, பராமரிப்பின்றி இருக்கும் திருவள்ளுவர் சிலையை டெல்லி தமிழ் சங்க வளாகத்துக்கு இடம் மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications