உட்லண்ட்ஸ் 'டிரைவ்-இன்' ஹோட்டலுக்கு மூடு விழா?

சென்னை அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம் அருகே உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் உள்ளது. மிகவும் பிரபலமான டிரைவ்-இன் ஹோட்டல் இது.
இந்த ஹோட்டலுக்கு திரைத் துறையினர், தொழிலதிபர்கள், காதல் ஜோடிகள் என பல தரப்பட்டவர்களும் அதிகம் வருவது வழக்கம்.
பயங்கர பிசியான அண்ணா சாலைக்கு அருகே மரங்கள், செடிகளுக்கு மத்தியில் புதைந்து கிடக்கும் இந்த ஹோட்டல் படு நிம்மதியான சூழலில் அமைந்திருப்பதால், பலரும் இங்கு வந்து கார்களில் அமர்ந்தபடி சாப்பிட விரும்புவார்கள்.
ஹோட்டலுக்கு முன்பு உள்ள இடத்தில்தான் கார்களை நிறுத்தி வாடிக்கையாளர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த இடம் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமானது என்பதால் தோட்டக்கலைத்துறை சார்பில் இதை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ஹோட்டலுக்குச் சென்று, உயர்நீதிமன்ற உத்தரவை அங்கு ஒட்டினர். மேலும் கார்களை நிறுத்தவும், சாப்பிடவும் கூடாது என எச்சரித்து நோட்டீஸ் ஒட்டினர்.
மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை போலீஸாரின் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால் கடந்த சனிக்கிழமையன்று ஹோட்டல் இயங்க முடியாமல் போனது.
கருணாநிதி-ஸ்டாலின் பார்வை:
இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும், தலைமைச் செயலாளர் திரிபாதியும் அங்கு வந்தனர். அரசுக்குச் சொந்தமான இடத்தை அவர்கள் பார்வையிட்டு விட்டுச் சென்றனர்.
இதையடுத்து மறுபடியும் காலியிடத்தில் கார்களை நிறுத்தி வாடிக்கையாளர்கள் சாப்பிட ஆரம்பித்தனர். இந்த நிலையில் இரவு 9 மணிக்கு போலீஸாருடன் தோட்டக்கலைத் துறையினர் வந்தனர். கார்களை நிறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். போலீஸாரும் கார்களை அகற்றினர்.
பின்னர் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில் ஆகியவை பூட்டப்பட்டன. இதனால் டிரைவ் இன் ஹோட்டல் தொடர்ந்து செயல்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications