தலைமை செயலாளர் போன் ஒட்டு கேட்பா?-அரசு மறுப்பு

டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் சமீபத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதை முதல்வர் கருணாநிதி உடனடியாக மறுத்தார். டிஜிபியும் மறுத்தார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு செய்தியை டெக்கான் குரோனிக்கிள் வெளியிட்டுள்ளது. அதில், தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயாவும் பேசிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடநாட் எஸ்டேட் தொடர்பாக திரிபாதி, உபாத்யாயாவுக்கு சில தகவல்களைக் கூறியதாக அந்த செய்தி கூறுகிறது.
இதை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்நோக்கத்துடன் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட்டு வரும் அந்த நாளிதழ் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செய்தியில் சிறிதளவும் உண்மை இல்லை.
தொடர்ந்து இந்த நாளிதழ் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. எனவேதான் நாளிதழ் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications