தண்ணீர் பந்தல்-தேமுதிகவினருக்கு விஜய்காந்த் உத்தரவு
சென்னை: கோடை காலம் ஆரம்பித்துவி்ட்டதால் தேமுதிக தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அஇசமக தலைவர் சரத்குமாரும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.
விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாக்டர் அம்பேத்கார் மனிதகுலம் ஒன்று என்பதை நிரூபிக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். சமுதாயத்தில் காலம் காலமாக தீண்டத்தகாதவர்களாக ஒரு பிரிவினர் கருதப்பட்டு, ஒடுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். அத்தகைய மக்கள் கண்ணியமான வாழ்வு பெற சமுதாயத்தை சீர்திருத்தும் பணியில் பெரும் பங்கு ஆற்றியவர்.
அவரது பிறந்த நாள் (இன்று) புதிய சமவாய்ப்புச் சமுதாயத்தை அமைக்கப் பாடுபடும் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டிய திருநாளாகும். அம்பேத்கார் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதையாவார்.
அத்தகைய அறிஞரின் பிறந்தநாளை நமது தோழர்கள் அவரது சிலைகளுக்கு ஆங்காங்கே மலர் மாலைகள் அணிவித்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தும் இனிப்புகள் வழங்கியும், மாலை நேர வகுப்புகள் நடத்தியும் கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன்.
கோடை காலம் ஆரம்பித்துள்ளதால் இன்று முதல் கோடை காலம் முடியும் வரை, தேமுதிக தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகம் தீர்க்கும் பணியில் தங்களை ஒப்படைக்குமாறு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
சரத்குமார்:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணல் அம்பேத்காரின் 118வது பிறந்த தினத்தை நாடே விமரிசையாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. தீண்டாமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தாலும், தன்னுடைய உழைப்பாலும், விடாமுயற்சியாலும் படித்து முன்னேறி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானதோடு, இந்திய அரசியல் சாசனத்தை வடித்த சிற்பி என்னும் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் அண்ணல் அம்பேத்கார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறை வேரூன்றி இன்று அவருடைய பிறந்த தினத்தில் இடஒதுக்கீடு முக்கிய பரிமாணத்தை அடைந்திருப்பது அவருடைய சமூக நீதிக்கொள்கையை இந்த தேசம் எந்த அளவிற்கு மதித்து வருகிறது என்பதன் வெளிப்பாடே.
இங்கொன்றும், அங்கொன்றுமாக நாட்டில் நிகழும் தீண்டாமைக் கொடுமைகள் முற்றிலும் ஒழிந்து, இடஒதுக்கீடு என்பது வெறும் சட்ட அளவில் மட்டுமின்றி, அதன் பலன்கள் தாழ்த்தப்பட்ட இனத்தின் அனைவருக்கும் சென்றடையச் செய்வதே அன்னாரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு சேர்க்கும்.
சாதி சமய பேதமற்ற, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயம் அமைய அண்ணல் அம்பேத்காரின் பிறந்த தினத்தில் நாம் உறுதியான சபதமேற்று பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications