கிரீமி லேயர் அளவுகோலை மாற்றியமைக்க சோனியாவிடம் திமுக எம்பிக்கள் மனு

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டடை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை (கிரீ மிலேயர்) கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டவர்களி்ல் வசதி படைத்தோருக்கு இந்த இட ஒதுக்கீடு பொறுந்ததாது என்று கூறியுள்ளது. அதாவது வருட வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பத்தில் யாருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் பலனே கிடைக்காது.
இதன்மூலம் இட ஒதுக்கீட்டிற்கான அர்த்தமே அடிபட்டுப் போய்விட்டதாக திமுக, பாமக உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந் நிலையில் திமுக எம்.பிக்கள் குழு இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தது.
மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற இந்த குழுவில் அமைச்சர்கள் ராசா, பழனிமாணிக்கம், வெங்கடபதி, ரகுபதி, திமுக எம்.பிக்கள் குப்புசாமி, கிருஷ்ணசாமி, சிவா, சுகவனம், ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
சோனியாவிடம் அவர்கள் அளித்த மனுவில்,
கிரீமி லேயர் பிரிவினரை அடையாளம் காண இப்போதுள்ள பொருளாதார அளவு கோலை (வருடத்துக்கு ரூ. 2.5 லட்சம் வருமானம்) நடைமுறைப்படுத்தினால் அது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பாக அமையும்.
இதனால் இந்த வருமான வரம்பை உயர்த்த வேண்டும்.
விரைவில் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த பரிந்துரைகள் அமலானால் மத்திய அரசுப் பணியில் குரூப்-டி ஊழியரின் வாரிசுகளுக்குக் கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்காது.
எனவே இது தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இது தொடர்பாக பிரதமருக்கும் முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தை பாலு அவரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications