சேது வழக்கு: ஏப் 29ல் இறுதி விசாரணை- தடை நீக்கம் இல்லை

ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது, அதை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும், சேது சமுத்திரத் திட்டத்தை வேறு பாதையில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டப் பணிகளை ராமர் பாலப் பகுதியில் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்தி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி முதலில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் இருந்தார் என்பதற்கோ, ராமர் பாலத்தை அவர்தான் கட்டினார் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் இந்த பதில் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இதையடுத்து பிப்ரவரி 29ம் தேதி புதிய பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த நிைலயில் இன்று ராமர் பாலம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இருப்பினும் இடைக்காலத் தடையை நீக்கும் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் ஏப்ரல் 29ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications