சுனாமி-புதுக்கோட்டைக்கு மத்திய அரசு ரூ.9.37 கோடி கூடுதல் நிதி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுனாமி பாதித்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.9.37 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட பயங்கர சுனாமியினால் புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறி கொடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல்மேல்குடி மற்றும் அவுடையார் கோயில் பகுதிகளில் வீடுகளை இழந்த 2,343 குடும்பங்களுக்கு ராஜிவ்காந்தி மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் தலா ரூ.2.38 லட்சம் செலவில் குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக ரூ.55.76 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது.
இதில் மணல்மேல்குடி பகுதியில் 1,712 வீடுகளும், ஆவுடையார் கோயில் பகுதியில் 631 வீடுகளும் கட்டப்படுகின்றன.
இந்தநிலையில் இந்த திட்டத்துக்காக மேலும் ரூ.9.37 கோடியை கூடுதல் நிவாரணமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.40,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications