தலைமைச் செயலகம் எதிரே ஓடும் பஸ்சில் தீ!
சென்னை: சென்னை தலைமை செயலகம் அருகே சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் திடீரென தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்து ஒன்று பிராட்வேயில் இருந்து கிண்டிக்கு புறப்பட்டது. காலை 9.30 மணிக்கு ராஜாஜி சாலையில் தலைமை செயலகம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன் பக்கத்தில் திடீரென தீப்பிடித்தது.
என்ஜினில் இருந்து பரவிய தீ பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது. இதையடுத்த சுதாரித்துக் கொண்டு டிரைவர் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு வெளியில் குதித்தார்.
பீதியடைந்த பயணிகளும் பதறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். அடுத்த சில நொடிகளுக்கெல்லாம் மளமளவென பரவிய தீயில் பஸ்சின் முன்பகுதி உருக்குலைந்தது.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பஸ்சின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு்ள்ளது.
தலைமை செயலகம் அருகே இந்த விபத்து நடந்ததால் இன்று அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications