வேகமாக ஏறிய பணவீக்கம் கொஞ்சம் குறைந்தது
டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.41 சதவீதமாக உயர்ந்திருந்த பண வீக்கம் நடப்பு வாரத்தின் முடிவில் 7.14 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை இல்லாத அளவாக கடந்த வாரம் பண வீக்க விகிதம் 7.41 சதவீதமாக உயர்ந்து நாட்டையே கிடுகிடுக்க வைத்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 5ம் தேதியுடன் முடிந்த நடப்பு வாரத்தில் பண வீக்க விகிதம் 7.14சதவீதமாக குறைந்துள்ளது.
தொடர்ந்து எட்டு வாரங்களாக உயர்வு நிலையில் காணப்பட்ட பண வீக்க விகிதம் குறையத் தொடங்கியிருப்பது சாதகமான சூழ்நிலையாக கருதப்படுகிறது. இருப்பினும் 5 சதவீத அளவுக்கு பண வீக்க விகிதம் குறைந்தால்தான் பொருளாதார சீர்குலைவைத்த தடுக்க முடியும் என்கிறது ரிசர்வ் வங்கி.
நேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பண வீக்க விகிதத்தைக் குறைத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்று கூறியிருந்தார். அரசுக்கு வரும் வருவாய் அளவு குறையும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது என்றும் அவர் அறிவித்திருந்தார்.
மேலும், விலைவாசியை வேண்டும் என்றே உயர்த்துவோர், கள்ளச்சந்தைக்காரர்கள், பதுக்கல் பேர்வழிகள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications