போலி டிரான்ஸ்பர்: 9 ஆசிரிய, ஆசிரியைகள் சஸ்பெண்ட்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலியான டிரான்ஸ்பர் உத்தரவுகளைக் காட்டி தங்களுக்கு விருப்பமான இடத்தில் பணியில் சேர்ந்த 9 ஆசிரிய, ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கா.புதுப்பட்டி மீனாட்சி, ஒட்டன்சத்திரம் கொல்லம்பட்டி சுப்பிரமணியம், ரெட்டியார்சத்திரம் வெள்ளமடத்துப்பட்டி எலிசபெத்மேரி, ஆத்தூர் ஜே.புதுக்கோட்டை ராஜேஸ்வரி, ஒட்டன்சத்திரம் பழையப்பட்டி புனிதா, வேடசந்தூர் நாகம்பட்டி கார்த்திகேயணி.
வேடசந்தூர் மீனாக்கம்பட்டி ஜெயமீனாம்பிகை, பழனி அடிவாரம் செல்வபாரதி, தொப்பம்பட்டி யாமின பூர்ணதிலகம் ஆகியோர் தங்கள் விருப்பமான இடத்துக்கு பணி மாறுதல் பெறும் பொருட்டு, கல்வித்துறை முன்னாள் இயக்குனர் உமா மகேஸ்வரியின் கையெழுத்தை போலியாக போட்டு மாறுதல் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி செல்வக்குமார் பணி மாறுதல் உத்தரவுகளை ஆய்வு செய்தபோது, மேற்கண்ட ஆசிரியர், ஆசிரியைகள் போலியான உத்தரவுகளை காட்டிப் பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களுக்கு யார் போலியான டிரான்ஸ்பர் உத்தரவுகளைக் கொடுத்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications