கோவிலில் விளக்கேற்றிய ஜெ. - அதிமுகவினரும் விளக்கேற்றி முழக்கம்

சித்ரா பெளர்ணமி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு அதிமுகவினர் தங்களது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் விளக்கேற்றி வைத்து, இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா என்று முழங்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்தான் இப்படி ஒரு உத்தரவை ஜெயலலிதா பிறப்பித்ததாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவியது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் உத்தரவுக்கேற்ப நேற்று தமிழகம் முழுவதும் விளக்கேற்றி வைத்தனர். குத்து விளக்கு, அகல் விளக்கு, காமாட்சி விளக்கு என விதம் விதமான விளக்குகள் ஏற்றப்பட்டன. அதிமுகவினருக்குச் சொந்தமான சில வணிக வளாகங்களில் சீரியல் செட்டுகளையும் போட்டு அசத்தியிருந்தனர்.
கொடநாடு எஸ்டேட்டுக்கு கோடை விடுமுறைக்காக சென்றுள்ள ஜெயலலிதா, அங்குள்ள பிள்ளையார் கோவிலில் விளக்கேற்றினார். நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஜெயலலிதா விளக்கேற்றியபோது அனைவரும் ஒளியேற்ற வாருங்கள் அம்மா என்று முழக்கமிட்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திலும் விளக்கேற்றி வைக்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, அமைப்புச் செயலாளர் சுலோச்சனா சம்பத், பதர் சயீத் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல தமிழகம் முழுவதும் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
600 விளக்கு வைத்து அசத்திய பிரமுகர்:
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆய்க்குடியில் ஒன்றிய செயலாளர் கே.செல்லப்பன் என்பவர் பிரமாண்டமாக விளக்கேற்றி அசத்தினார்.
அதே பகுதியில் உச்சிபிள்ளையார் கோவில் என்ற மண்பொத்தை (மலை) உள்ளது. இதில் கீழிலிருந்து மலையின் உச்சிபகுதி வரையிலுள்ள 300 அடி உயரத்திற்கு இருபுறங்களிலும் 600 விளக்குகள் வைத்து தீபம் ஏற்றி நூதன முறையில் வழிபாடு நடத்தினார்.
மலை முழுவதும் தீப வழிபாடு நடந்தததை அப்பகுதி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications