இலங்கை-குண்டு வீச்சில் தமிழ் இளைஞர் பலி
கிளிநொச்சி: முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் ஒரு அப்பாவி தமிழ் இளைஞர் கொல்லப்பட்டார். 2 சிறார்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
முல்லைத் தீவு நகரையொட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில் அம்பலவான்போக்கனை என்ற இடத்தைச் சேர்ந்த உகந்தன் (18) எனும் தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
லக்ஷனா (5), கிருஷாலினி (8), கனிஷ்டன் (17), தியாகராஜா (48), சுதாகரன் (22), ஜீவரத்னம் (65), அந்தோணி ஜெரால்டு (42), சத்தியநாதன் (42) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள வன்னாங்குளம் சுனாமி நினைவிடம் அருகே மேலும் 2 முறை குண்டு வீசி விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் யாரும் காயமடையவில்லை.
இருப்பினும் மீனவர்களின் படகுகள், மீன் பிடி சாதனங்கள் அழிக்கப்பட்டன.
இதேபோல வன்னேரி அருகே உள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் வந்த லாரியை இலங்கை ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவினர் கண்ணிவெடி வைத்துத் தகர்த்தனர். இதில் லாரி டிரைவர் எழில்மேகவர்மன், கிளீனர் தர்மஜெயந்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications