மதுரை தேவர் சிலை அவமதிப்பு-மன நோயாளி கைது

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நேற்று அவமதிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான தேவர் சமுதாயத்தினர் கூடி அவமதித்தவரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர்.
பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை, தேவர் சிலை உள்ள பகுதியில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரது பெயர் திருவழகு என்றும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
இதுகுறித்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா, லிங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த திருவழகு என்பவர் சிலை அவமதிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவர் சிலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஜெயதாஸ், இன்று அதிகாலை, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த திருவழகைப் பிடித்து அவரது பையை சோதனையிட்டார்.
அப்போது அந்தப் பையில், ஒரு பாட்டில் தண்ணீர் இருந்தது. இன்னொரு பாட்டிலில் மலத்தைக் கரைத்து வைத்திருந்தார். மேலும் சதாம் உசேனின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் ஒன்றும் வைத்திருந்தார்.
உடனடியாக அவரை தல்லாகுளம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது தேவர் சிலை மீது மனித மலத்தையும், சாணியையும் தான் தான் தெளித்ததாக ஒத்துக் கொண்டார். மேலும், நாட்டில் சிலைகளே இருக்கக் கூடாது. எல்லா சிலைகளையும் இப்படித்தான் அசிங்கப்படுத்தப் போகிறேன் என்றும் கூறினார்.
அவர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் மன நல பாதிப்புக்காக சிகிச்சை பெற்ற விவரமும் தெரிய வந்துள்ளது. தற்போது கோரிப்பாளையம் தர்காவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இருப்பினும் உண்மையிலேயே அவர் மன நோயாளிதானா அல்லது அப்படி நடிக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தேவர் சிலை அவமதிப்பைத் தொடர்ந்து நடந்த மோதலில் 15 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு வலை வீசப்பட்டுள்ளது என்றார் நந்தபாலன்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications