மதுரை சிறையில் சோதனை-சிம்கார்டை விழுங்கி கைதி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை நடத்தியபோது ஒரு கைதி செல்போன் சிம்கார்டை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மத்திய சிறையில் 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்தக் கைதிகளில் உள்ள ரெளடிகள் சிறையிலேயே ரகசியமாக செல்போன்கள் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தால் செல்போன்களை சிறைக்குள் எளிதான நுழைந்து விடுகின்றன.

இந்த செல்போன் மூலம் சிறையில் இருந்தவாரே தங்களது ஆட்களைக் கொண்டு வெளியில் கொலைகள், அடிதடிகள், கடத்தல்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து சிறையில் அடிக்கடி சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் திடீரென சிறையில் சோதனை நடத்தினர். அப்போது ஈரோட்டை சேர்ந்த ஸ்டீல் ரவி, அப்துல்ஹக் ஆகிய இருவரிடம் சிம்கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடன் இருந்து சிம் கார்டுகளை போலீசார் வாங்க முயற்சித்தபோது ஸ்டீல் ரவி அதை விழுங்கிவிட்டான்.

ஹக்கிடம் இருந்த சிம் கார்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 15ம் தேதி ஸ்டீல் ரவியிடம் இருந்து 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+