வெளிநாட்டு தொழிலாளர்களால் வளைகுடா நாடுகளுக்கு ஆபத்தில்லை-ஆய்வு
துபாய்: வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு இந்தியத் தொழிலாளர்கள் எந்த வகையிலும் மிரட்டலாக இருக்க மாட்டார்கள் என கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் காவல் துறை தலைவர் தானி கல்பான் தமீம் ஏப்ரல் 16ம் தேதி அபுதாபியில் நடந்த தேதிய பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பேசுகையில், வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டினரால் எதிர்காலத்தில் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
ஆனால் அரேபியன்பிசினஸ்.காம் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தவறு என்று தெரிய வந்துள்ளது.
இந்த இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 58 சதவீதம் பேர், வளைகுடா நாடுகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்துக்கு மறுப்புதெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வளைகுடா நாடுகளின் கலாச்சாரம், பாரம்பரியத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.
14 சதவீதம் பேர் மட்டுமே வெளிநாட்டினரால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும் 40 சதவீதம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். கத்தாரில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications