இந்தியாவுக்கு ஓடி வருகிறார் ஞானேந்திரா?

நேபாளத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. மன்னருக்கான அனைத்து அதிகாரங்களையும் ஏற்கனவே பறித்து விட்ட நிலையில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்துள்ளது. எனவே ஞானேந்திராவுக்கான இறுதிக் கதவும் மூடப்பட்டு விட்டது.
பிரதமர் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படும் பிரசந்தா உள்ளிட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் ஞானேந்திரா கெளரவமாக அரண்மனையை விட்டு வெளியேறி விட வேண்டும் என கெடு விதித்துள்ளனர்.
நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருவதால், விபரீத விளைவுகள் ஏற்படும் முன்பு நாட்டை விட்டே வெளியேறி விட ஞானேந்திரா தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அவர் இந்தியாவில்அடைக்கலம் புகலாம் எனத் தெரிகிறது.
ஞானேந்திராவின் மருமகள் ஹிமானி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். எனவே ஞானேந்திராவும் தனது குடும்பத்தினரோடு ராஜஸ்தானுக்கு செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் ஞானேந்திரா தரப்பிலிருந்து இதுவரை அரசியல் அடைக்கலம் கோரி எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் ஞானேந்திராவுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் பொருத்தமாக இருக்காது அவர் இந்தியாவுக்குத்தான் புகலிடம் தேடி வருவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications