மகனின் காதலிக்கு மிரட்டல்-சிக்கலில் மணிவண்ணன்
இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன். இவர் சில இரு படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ்தேசம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில் ரகுவண்ணனின் காதலி என சொல்லப்படும் ஸ்டெபி என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மணிவண்ணன் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார்.
ஸ்டெபி சென்னை விருகம்பாக்கம், சாய் நகரைச் சேர்ந்தவர். இவருடைய தாயார் பெயர் மாலா. இவர் ஒரு டான்ஸர். ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஷூவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்திருக்கும் ஸ்டெபி, நேபாளி படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இவருக்கும் ரகுவண்ணனுக்கும் இடையே காதல் வந்த கதை வித்தியாசமானதாம். அதாவது சாட்டிங்கில் இவருக்கு சத்யராஜின் மகன் சிபிராஜுடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நட்போடு பழகியுள்ளனர். சிபி மூலம் அவரது நண்பரான ரகுவுடன் ஸ்டெபிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம் அப்படியே காதலாக மாறியுள்ளது. முதலில் ரகுவண்ணனின் காதலுக்கு மணிவண்ணன் குடும்பத்தில் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் இப்போது கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் தனக்கும், ரகுவண்ணனுக்கும் ரகசியத் திருமணம் நடந்து விட்டதாக ஸ்டெபி கூறியுள்ளார்.
மணிவண்ணன் குடும்பத்தினர் மீது ஸ்டெபி இன்று காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
நானும், ரகுவண்ணனும் கடந்த 2007 அக்டோபர் முதல் காதலித்து வருகிறோம். எங்கள் காதல் இருவீட்டாருக்கும் தெரியும். எங்கள் திருமணத்திற்கு ரகுவண்ணன் குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவித்தனர். இதனால் நெருங்கிப் பழகினர்.
ஆனால் பின்னர் எதிர்ப்புத தெரிவித்தனர். இதையடுத்து வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி ரகுவண்ணன் என்னை ரகசிய திருமணம் செய்தார். பெற்றோருக்கு பயந்து நாங்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்களை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார்.
இப்போது என்னை ஏற்க மறுத்து சேர்ந்து வாழ மறுக்கிறார். மணிவண்ணன் குடும்பத்தினர் என்னை மிரட்டுகிறார்கள். என் மீது மகளிர் ஆணையத்தில் பொய் குற்றச்சாட்டுகள் கூறி பிரிக்க முயற்சி செய்கிறார்.
திருமணத்தை பற்றி பேசினால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். குடும்பத்தையே ஒழித்துக் கட்டி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். எனவே எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மேலும் மாநில மகளிர் ஆணையத்தில் என் மீது பொய் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அந்த புகார் பொய்யானது என்பதை நாங்கள் ஆணையத்தில் நிரூபித்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் ஸ்டெபி.
தானும், ரகுவண்ணனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் ஆதாரமாக காட்டுகிறார்
அந்த போட்டோக்களை கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் ஆதாரமாக காட்டினார் ஸ்டெபி. ஸ்டெபியிடம் 25 புகைப்படங்கள் உள்ளன. அனைத்திலுமே இருவரும் நெருக்கமாக உள்ளனர். சில படங்களில் மேலாடைகள் இன்றியும் உள்ளனர்.
பின்னர் ஸ்டெபி செய்தியாளர்களிடம் பேசுகையில், நானும், ரகுவண்ணனும் உயிருக்கு உயிராக காதலித் தோம். அவர் என்னை தனது பாட்டியின் போட்டோ முன்பு நிற்கவைத்து பாட்டியின் மெட்டியை மஞ்சள் துணியில் சுற்றி என் கழுத்தில் கட்டினார். அவர் என்னை விரும்பினார். ஆனால் பெற்றோருக்கு பயந்து என்னை வெறுக்கிறார். பெரிய பெரிய ஆட்களை பிடித்து என் குடும்பத்தை மிரட்டுகிறார்கள்.
இயக்குநர் சீமான், அவரது தம்பி நாகேந்திரனும் என்னை மிரட்டுகிறார்கள். அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து ரகுவண்ணனுடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.
மணிவண்ணன் மற்றும் ரகுவண்ணன் மீதான இந்தப் புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications