ராமர் பாதம் ராமநாதசுவாமி கோவிலுக்கே சொந்தம்: உயர் நீதிமன்றம்
மதுரை: ராமர் பாதம் அமைந்துள்ள இடம், ராமநாதசுவாமி கோவிலுக்கே சொந்தம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
ராமேஸ்வத்தை சேர்ந்த ராமசந்திரன், ஜோஷி, ராமநாதன், உதயகுமார் ஆகியோர் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுவில், ராமேஸ்வரத்தில் ராமரின் பாதம் பதிந்த இடத்தில், 500 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது மூதாதையாரான நீலகண்ட ஐயர் பீடம் அமைத்து கோவில் கட்டினார்.
அவரே கோவில் பூசாரியாகவும் தர்மகர்த்தாவாகவும் இருந்தர். அவருக்கு பிறகு அவரது வாரிகளான நாங்கள் தான் அந்த கோவிலை நிர்வகித்து வருகிறேம்.
இந்த நிலையில் ராமர்பாதம் ஒரு பொது வழி பாட்டு ஸ்தலம் என்றும், கோவிலில் நீலகண்ட ஐயர் வாரிகளுக்கு பூசை செய்ய மட்டுமே உரிமை உண்டு என்றும் அவர்களுக்கு அறங்காவலர் உரிமை இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதை எதிர்த்து நாங்கள் சார்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே கீழ் நீதி மன்றம் தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர், ராமர் பாதம் அமைந்துள்ள இடம், ராமநாதசுவாமி கோவிலுக்கே சொந்தம் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில், ராமர் பாதம் அமைந்துள்ள இடம் ராமநாத சுவாமி கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஒரு இடத்துக்கு உரிமை கோருபவர்கள் அந்த இடம் தனக்கு சொந்தமானது என்று நீருபிக்க வேண்டும்.
மனுதார் கூறியுள்ள சில வழக்குகள் பூசாரி உரிமைக்கு மட்டும் பொறுந்தக்கூடியது. எனவே இந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications