33,000 பவுன்டுகளுக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் டிக்கெட்

96 ஆண்டுகளுக்கு முன்பு 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தெற்கு இங்கிலாந்தில் உள்ள செளதாம்ப்டனிலிருந்து நியூயார்க்குக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கியது டைட்டானிக். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதுவே அதன் கடைசி பயணமாகவும் மாறிப் போனது.
நடுக் கடலில் பனிப் பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது டைட்டானிக். இந்த விபத்தில் 1500 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கப்பலின் டிக்கெட் ஒன்று இங்கிலாந்தைச் சேர்ந்த லிலியன்
அஸ்பிளன்ட் என்பவரிடம் இருந்தது.
லிலியனுக்கு 5 வயதாக இருக்கும்போது லிலியனின் குடும்பத்தினர் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தனர். லிலியனுடன் அவருடைய பெற்றோர், நான்கு சகோதரர்கள் டைட்டானிக்கில் பயணம் செய்தனர். ஸ்வீடனிலிருந்து அமெரிக்காவுக்கு குடி பெயருவதற்காக இந்தப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர்.
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியபோது லிலியன், அவருடைய தாயார், ஒரு சகோதரர் மட்டும் உயிர் பிழைத்தனர். ஆனால் தந்தை மற்றும் 3 சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உயிர் பிழைத்த லிலியன் தான் பயணம் செய்த டிக்கெட்டை மிக பத்திரமாக வைத்திருந்தார். 2006ம் ஆண்டு மே 6ம் தேதி தனது 99வது வயதில் லிலியன் மரணமடைந்தார்.
அதுவரை அவர் ஒரு ஷூ பாக்ஸில் பத்திரப்படுத்தி வைத்திருந்த டைட்டானிக் டிக்கெட்டை அவருடைய ஒன்று விட்ட சகோதரர் சமீபத்தில் ஏலத்திற்குக் கொண்டு வந்தார்.
லிலியன் வைத்திருந்த டிக்கெட் 3ம் வகுப்பு பயணச் சீட்டாகும். தென் மேற்கு இங்கிலாந்தின், டெவிஸஸ் நகரில் உள்ள ஹென்றி ஆல்டிரிட்ஜ் அன் சன் என்ற ஏல நிறுவனம் இந்த கடைசி டைட்டானிக் டிக்கெட்டை ஏலத்தில் விட்டது.
அதில், 33 ஆயிரம் பவுன்டுகளுக்கு இந்த டிக்கெட் ஏலம் போனது. இந்த ஏலத்தில் டைட்டானிக் டிக்கெட் தவிர, கப்பல் மூழ்கியபோது நின்று போன ஒரு பாக்கெட் கடிகாரமும் ஏலத்திற்கு விடப்பட்டது. அது 31 ஆயிரம் பவுன்டுகளுக்கு ஏளம் போனது. அதை ஒரு ஸ்வீடன்காரர் ஏலத்தில் விட்டார்.
ஏலத்தில் சீனா, அமெரிக்கா, ஸ்வீடன், அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனராம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications