வீரன் சுந்தரலிங்கனார் படம் அவமதிப்பு-நெல்லையில் பதற்றம்
நெல்லை: நெல்லை மாவட்ட கிராமம் ஒன்றில் புதிய தமிழகம் கட்சி கொடி கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. வீரன் சுந்தரலிங்கனார் படமும் அவமதிப்பு செய்யப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளை சீவலப்பேரி அருகே உள்ளது நொச்சிகுளம். இந்த ஊரை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், அருகில் உள்ள தோணித்துறையை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நொச்சிகுளத்தில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு புதிய தமிழகம் கொடி கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.
நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் அந்த கொடி சம்பத்தை வெட்டி சாய்த்தனர். அப்பகுதியிலுள்ள டியூப் லைட்டையும் அடித்து நொருக்கி விட்டு தப்பிச் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரன் சுந்தரலிங்கனார் படமும் அவமதிப்பு செய்யப்பட்டது.
காலையில் இதைப்பார்த்த நொச்சிகுள கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதை கண்டித்து புதிய தமிழகம் இளைஞரணி வட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
தகவல் அறிந்த ஏடிஎஸ்பி வேணுகோபால், தழையூத்து இன்ஸ்பெக்டர் மகாதேவன், எஸ்ஐ அதிசயராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் அதே இடத்தில் மீண்டும் புதிய கொடி கம்பம் நட்டு கொடியேற்றினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications