திருமண நாளில் வீட்டில் தீ- சாம்பலான சீர்வரிசை
தூத்துக்குடி: திருமண நாளில் மணமகள் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரொக்கம் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
தூத்துக்குடி தமோதரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் சண்முகவேல் மகள் கமலேஸ்வரி. இவருக்கும் வண்ணார் தெருவை சேர்ந்த காசி மகன் செல்வகுமாருக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதை முன்னிட்டு நேற்றிரவு மேலசண்முகபுரம் 2-வது தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு இருவீட்டாரும் திருமண மண்டபத்திலேயே தங்கிவிட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சண்முகவேலின் வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீ அருகில் இருந்த பால்ராஜ் என்பவரது வீட்டிலும் பற்றியது.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சண்முகவேல் வீட்டில் இருந்த டிவி, கட்டில், பீரோ உள்ளி்ட்ட பொருட்கள் கருகி நாசமாயின. திருமண செலவுக்காக பீரோவில் வைத்திருந்த ரூ. 1.25 லட்சமும் எரிந்து சாம்பலானது.
இதுபோல் பால்ராஜ் வீட்டிலும் ரூ. 5 ஆயிரம், 2 பவுன் நகை, டிவி, கட்டில் எரிந்து சேதமடைந்தன. இருவீட்டிலும் சேர்ந்து சேதமதிப்பு ரூ.2 லட்சமாகும். சண்முகவேல் வீடு தீப்பிடித்த எரிந்த போதிலும் திட்டமிட்டப்படி இன்று காலை அருகிலுள்ள சிவன் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications