மதுரையில் 2 ஐடி பார்க்குகள்-முதல்வர் இன்று அடிக்கல்
மதுரை: மதுரையில் 2 இடங்களில் உருவாக்கப்படவுள்ள சாப்ட்வேர் பூங்காங்களுக்கு முதல்வர் கருணாநிதி இன்று (26ம் தேதி) அடிக்கல் நாட்டுகிறார். அதே போல மதுரை விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அமைக்கும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
எல்காட் நிறுவனம் மதுரை பாண்டி கோவில் அருகே இலந்தைகுளத்தில் 29 ஏக்கர் நிலத்தில் சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கிறது.
அதே போல மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள வடபழஞ்சியில் 236 ஏக்கரில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்காக டைடல் பார்க் அமைக்கப்படுகிறது.
மதுரை அவனியாபுரம் விமான நிலையமும் ரூ. 150 கோடி செலவில் விரிவாக்கப்படவுள்ளது. அங்கு 166 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள புதிய டெர்மினலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
விமான நிலைய விரிவாக்க விழாவில் கருணாநிதியுடன் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பிரபுல் படேலும் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மு.க. அழகிரி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் ஜவஹர் ஆகியேர் ஆகியோர் வரவேற்றனர்.
அழகர்கோவில் சாலையில் உள்ள சர்கியூட் ஹவுசில் ஓய்வெடுக்கும் கருணாநிதி மாலை விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் வடபழஞ்சி, இலந்தைகுளத்தில் உருவாக இருக்கும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications