கருணாநிதி வீடு முன்பு உண்ணாவிரதம் - 200 பெண்கள் கைது
சென்னை: முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற ஏராளமான 200க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையைச் சேர்ந்த தமிழக லட்சிய குடும்பம் என்ற அமைப்பு பூரண மது விலக்கை வலியுறுத்தி கடந்த சில வருடங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
அரசு ஏற்று நடத்தி வரும் மது பானக்கடைகளால் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தினர் பெருமளவில் பாதிக்கப்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். எனவே அத்தகைய அரசு மதுபானக்கடைகளை மூட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி வீடு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து முதல்வர் வீடு உள்ள பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு அமைப்பின் தலைவர் வேலாயுதம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு கூடி மதுவிலக்கு உறுதி மொழி ஏற்றனர்.
பின்னர் அங்கிருந்த ஊர்வலமாக புறப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லம் நோக்கி வந்தனர். அங்கு தயாராக இருந்த மயிலாப்பூர் உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தடையை மீறிச்சென்று அவர்கள் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் வாசுகி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கோபாலபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications