கொடநாடு 'கேட்': சப் கலெக்டர் உத்தரவு செல்லாது - உயர்நீதிமன்றம்
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் போடப்பட்டுள்ள கேட்டை அகற்ற சப் கலெக்டர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானதாக கருதப்படும் கொடநாடு எஸ்டேட் செல்லும் பாதையை, அப்பகுதியில் உள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட சில பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென அந்தப் பாதையை மறித்து கொடநாடு எஸ்டேட் நிர்வாகம், கேட் போட்டு விட்டது. இதையடுத்து கொடநாடு ஊராட்சி சார்பில் குன்னூர் சப் கலெக்டரிடம் புகார் தரப்பட்டது.
இப்புகாரை விசாரித்த சப் கலெக்டர், கேட்டை அகற்றுமாறு கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு இன்று, சப் கலெக்டரின் உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் வருவாய்த்துறையினர் உரிய நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறிய அவர் சப் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்தார்.
அதேசமயம், பொதுமக்களின் நலன் கருதி, கேட்டை அகற்றி, அப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்த கொடநாடு எஸ்டேட் அனுமதிக்கலாம் என்றும் ஆலோனை தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications