அமெரிக்காவில் சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை
நியூயார்க்: நியூஜெர்சியில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் வேலை பறிபோனதால் மன நிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணேஷ் சந்தான கிருஷ்ணன் (27) என்ற அந்த பொறியாளர் தபன் சீ பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 3ம் தேதி இச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இது குறித்து நேற்று முன் தினம் தான் சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் இருந்து தகவல் வந்துள்ளது.
2005ம் ஆண்டு அமெரிக்கா வந்த சந்தான கிருஷ்ணன் தனது பி.எச்டியை முடித்துவிட்டு போஸ்ட் டாக்டோரல் உயர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், இவருக்கு திடீரென உதவித் தொகை நின்றுபோனதால் ஆராய்ச்சிப் படிப்பை தொடர முடியவில்லை.
இதையடுத்து நியூஜெர்சியில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். வெஸ்ட்செஸ்டர் கவுன்டியில் உள்ள உசிநிங் பகுதியில் அல்பேனி போஸ்ட் சாலையில் ஒரு அடு்க்குமாடி குடியிருப்பில் தனியே வசித்து வந்தார்.
இந் நிலையில் வேலையும் போனதையடுத்து இவர் மன நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து சாலைகளில் போகும் கார்களை விரட்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில் வீட்டு வாடகை கட்ட முடியாமல் அங்கிருந்தும் காலி செய்யப்பட்டார். இதனால் ஒரு வீட்டில் ஷெட்டில் தூங்கி வந்துள்ளார். இந் நிலையில் ஷெட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த மார்ச் 11ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மன நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்ததால் மன நல சிகிச்சைகாக வெஸ்ட்செஸ்டர் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை தரப்பட்டு டிஸ்சார்ஜ் ஆன இவர் வெளியே வந்தவுடன் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலையில்லாமல் சிரமமப்பட்ட இவரை ஊருக்குத் திரும்பி வந்துவிடுமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதை சந்தான கிருஷ்ணன் விரும்பவி்ல்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் இவரது சகோதரி பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றபோது தான் சந்தான கிருஷ்ணன் தெருவில் வசிப்பது தெரியவந்துள்ளது.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications