37 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை
ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து இன்று 37 அகதிகள் ராமேஸ்வரத்துக்கு படகுகள் மூலம் வந்தனர்.
இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் அகதிகள் வருகை துவங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனையில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 37 பேர் படகுகளில் வந்திறங்கினர். இதில் 14 பேர் குழந்தைகளாவர்.
தகவலறிந்த வருவாய் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் யாழ்பாணம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். தங்கள் பகுதியில் குண்டு வீச்சு அதிகமானதைத் தொடர்ந்து உயிருக்கு பயந்து தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும் படகில் வர ரூ.1.76 லட்சம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
அந்தமானில் 60 இலங்கை மீனவர்கள் கைது:
இதற்கிடையே அந்தமான் நிக்கோபார் அருகே எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் 60 பேர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications