தடுப்பூசி: நெல்லையிலும் ஒரு குழந்தை பலி

திருவள்ளூரில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகளும், திண்டுக்கல்லி்ல் ஒரு குழந்தையும் பலியாயின. அதே போல ஒரிஸ்ஸாவில் 2 குழந்தைகளும் பலியாகியுள்ளன.
தர்மபுரியில் ஒரு குழந்தையும் தடுப்பூசியால் பலியானதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை மருத்துவ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந் நிலையில் நெல்லையில் தடுப்பூசி போடப்பட்ட ஒரு குழந்தை பலியாகியுள்ளது.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் கணேசன்-முத்துமாரி தம்பதியின் மகள் முத்துநாகு. 8 மாதமான இந்தக் குழந்தைக்கு கடந்த 23ம் தேதி மீனாட்சிபுரம் மாநகராட்சி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டால் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் என்பதால் அதற்கும் மாத்திரை கொடுத்துள்ளனர். குழந்தை முத்துநாகுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. தாயார் மாத்திரை கொடுத்துள்ளார்.
ஆனால் காய்ச்சல் அதிகமாகி குழந்தைக்கு வலிப்பு ஏற்படவே நெல்லையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை முத்துநாகு இறந்தது.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு












Click it and Unblock the Notifications