போலி டிரான்ஸ்பர் உத்தரவு பிறப்பித்த கல்வி அதிகாரி கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், சென்னை தொடக்கக் கல்வித்துறை இயக்குநரின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி இடமாற்ற உத்தரவைப் பிறப்பித்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய 9 ஆசிரிய, ஆசிரியைகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் இடமாறுதலாகிச் சென்றனர். இவர்களில் 8 பேர் ஆசிரியைகள், ஆசிரியர் ஒருவர்.
8 ஆசிரியைகளும் இடமாறுதலாகிச் சென்ற நிலையில் ஆசிரியர் மட்டும் பணியில் சேருவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் விசாரிக்கச் சென்றார்.
அப்போது அவரு பணி இடமாறுதல் உத்தரவைப் பார்த்த அங்குள்ள அதிகாரிகள் அதில் இடம் பெற்றிருந்த தொடக்கக் கல்வி இயக்குநரின் கையெழுத்து போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து 9 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாவட்ட கல்வி அதிகாரி, போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடந்தது. இதில் நத்தம் யூனியன் உதவி தொடக்க கல்வி அதிகாரி குருசண்முகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக தட்டச்சாளர் தமிழரசி, திண்டுக்கல் டிராவல்ஸ் நிறுவன அதிபர் சுரேஷ்குமார் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று குருசண்முகத்தைக் கைது செய்தனர். தமிழரசியும், சுரேஷ்குமாரும் தப்பிவிட்டனர். அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.
தமிழரசிதான், சம்பந்தப்பட்ட 9 ஆசிரியர், ஆசிரியைகளிடமும் தான் இடமாறுதல் வாங்கித் தருவதாக கூறி ஆசை காட்டியுள்ளார். அதற்கு குரு சண்முகம் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து 9 பேரும் மொத்தமாக ரூ.6 லட்சம் பணத்தை சுரேஷ்குமாரிடம் கொடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுபோல 110 ஆசிரிய, ஆசிரியைகள் போலியான இடமாறுதல் உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பெருமளவு பணம் இதில் கைமாறியுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் இடமாறுதல் உத்தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications