ராமர் பால வழக்கு: நாளை வரை விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராமர் பாலப் பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி முதல் வழக்காக இந்த சேது சமுத்திரத் திட்ட வழக்கை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது சுவாமி சார்பில் ஆஜரான வக்கீல்கள்,நீதிபதிகள் முன்பு ஒரு கோரிக்கை வைத்தனர். நாளைதான் விசாரணைக்கு வழக்கு வருவதாக நாங்கள் நினைத்திருந்தோம். எனவே அதற்கேற்ப ஆயத்தமாகவில்லை. எனவே நாளை வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற நீதிபதிகள், நாளை வரை வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். நாளை இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் சுவாமி தரப்பில் இன்னொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுதான் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று மும்முரமாக உள்ளார். இதற்குக் காரணம், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான மீனம் பிஷரிஸ் பப்ளிக் லிமிட்டெட் நிறுவனத்திற்கு இதனால் பெரும் பலன் கிடைக்கும். இந்த நிறுவனத்திற்கு அவரது இரு மனைவிகளும், இருமகன்களும்தான் உரிமையாளர்கள்.
எனவே இந்த வழக்கில் டி.ஆர்.பாலுவையும் சேர்க்க வேண்டும் என்று சுவாமி கோரியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான இடைக்காலத் தடை விலகுமா என்பதை நாளை தெரிய வரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications