திண்டுக்கல் அருகே சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் கவலைக்கிடம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சத்துணவு சாப்பிட்ட 5 குழந்தைகள வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாமரைபாடி அருகே உள்ள ம.மூ.கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டனர். இதில் முனீஸ்வரன் (9), முனியம்மாள் (7), வெள்ளையம்மாள் (7) ஆகிய குழந்தைகள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல அங்குள்ள அரசு பள்ளியில் படிக்கும் மகாமுனி (9) மற்றும் சந்திரலேகா ஆகியோரும் சத்துணவு சாப்பிட்ட சில மணி நேரத்தில் வாந்தி பேதியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குழந்தைகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு மருத்துமவனையில் குவிந்தனர். குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications