நாளை முதல் ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை
சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு 39 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் மாலா தெரிவிக்கையில், நாளை (மே 1) முதல் ஜூன் 8ம் தேதி வரை 39 நாட்கள் ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறையில் வழக்கு விசாரணைகளை சிறப்பு பணியில் நீதிபதிகள் கவனிப்பார்கள்.
நீதிபதி ராஜசூர்யா, நீதிபதி சுதந்திரம் மற்றும் நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் முதல் கட்ட விடுமுறை நீதிபதிகளாக பணியாற்றுவார்கள். மே 18ம் தேதி வரை வழக்கு விசாரணைகளை இந்த 3 நீதிபதிகளும் கவனிப்பார்கள்.
ரிட் மற்றும் பொது வழக்குகளை நீதிபதி ராஜசூர்யாவும், கிரிமினல் மற்றும் ஜாமின் மனுக்களை நீதிபதி சுதந்திரமும் கவனிப்பார்கள். தொழிலாளர்கள் தொடர்பான ரிட் மனுக்கள் உள்ளிட்ட மற்ற வழக்குகளை நீதிபதி சத்யநாராயணன் கவனிப்பார்.
2ம் கட்ட விடுமுறை நீதிபதி வெங்கடராமன், நீதிபதி வேணுகோபால் மற்றும் நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் பணியாற்றுவார்கள். ஜூன் முதல் தேதி வரை வழக்கு விசாரணைகளை இவர்கள் கவனிப்பார்கள்.
ஜூன் 1 முதல் 8ம் தேதி வரையிலான கடைசி கட்ட விடுமுறை நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்யன், நீதிபதி ராஜசூர்யா மற்றும் நீதிபதி நாகமுத்து ஆகியோர் கவனிப்பார்கள் என்றார்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications