ஆந்திராவில் 2 மதுரை ரெளடிகள் சுட்டுக் கொலை-தமிழக போலீஸ் 'எண்கெளன்டர்'
மதுரை: மதுரையைச் சேர்ந்த ரெளடி கணேசனும், அவனது கூட்டாளியும் ஆந்திர மாநிலம் மதனபள்ளியி்ல் இன்று தமிழக போலீசார் நடத்திய எண்கெளன்டரில் பலியாயினர்.
மதுரை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தலில் ஈடுபட்ட வந்தவன் ஒத்தக்கடை கணேசன் (35). பிரபல ரெளடியான இவனை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால், தலைமறைவாகி விட்டான்.
இந் நிலையில் கணேசன் ஆந்திர எல்லையான மதனபள்ளியில் தங்கி இருப்பதாக தெரிய வந்தது. அங்கு ஒரு நிலப் பிரச்சினை தொடர்பாக கட்டப் பஞ்சாயத்து செய்ய சென்றிருந்த விவரம் தெரியவந்தது.
இதையடுத்து மதுரையிலிருந்து தனிப் படை போலீசார் அங்கு விரைந்தனர். இன்று அதிகாலை கணேசன் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். கணேசனுடன் கூட்டாளிகள் சிலரும் இருந்தனர்.
போலீசார் அவர்களை சரணடையும்படி உத்தரவிட்டனர். ஆனால், அவர்கள் அரிவாள்களுடன் போலீசார் மீது பாய்ந்து பயங்கரமாகத் தாக்கினர்.
இதையடுத்து அவர்களை போலீசார் சுட்டதில் ஒத்தக்கடை கணேசன், கூட்டாளி ஒருவன் ஆகியோர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
ரெளடிகள் தாக்கியதில் போலீசார் சிலருக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. கணேசனுடன் இறந்த மற்றொரு ரெளடியின் பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
காயமடைந்த போலீசார் மதனபள்ளி அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆந்திர போலீசாருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்த கணேசன் மீது 10 கொலை வழக்குகள் உள்ளன. இதில் 5 கொலைகளை கணேசனே நேரடியாக நடத்தியுள்ளான்.
பணத்துக்கா ஆட்களை கடத்துவது, நிலம்-பணம் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவன். இவனுக்கு ஏராளமான சொத்துக்களும் உள்ளன.
கொலை வழக்கு ஒன்றில் கணேசனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருந்தது. அதில் மேல் முறையீடு செய்து சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தான்.
ஆனாலும் தொடர்ந்து தனது கொலை, கொள்ளைகளை அரங்கேற்றி வந்தான். கணேசனுக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications