ரொம்ப நல்லவரு.. இலங்கை கிரிக்கெட் மீடியா மேனேஜர் நீக்கம்
கொழும்பு: மீடியாவுடன் மிக நெருக்கமாக பழகிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளரை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளார் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால நிர்வாகியான அர்ஜூன ரணதுங்கா.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீடியா மேனேஜர் சமந்தா அல்கமா கூறுகையில், என்னை பதவியிலிருந்து ரணதுங்கா நீக்கியுள்ளதாக கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி துலிப் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
மீடியா மேனேஜராக எனது சேவை தேவையில்லை என்று ரணதுங்கா கூறியுள்ளாராம்.
நான் மீடியாவுடன் மிக நெருக்கமாகவும், நல்ல முறையிலும் பழகி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரணதுங்கா கூறியுள்ளார்.
2005ம் ஆண்டிலிருந்து இந்தப் பணியை, ஒரு பைசா சம்பளம் கூட வாங்காமல் நான் செய்து வருகிறேன். எனக்கு எதிராக செயல்பட்ட ரணதுங்கா இப்போது என்னைப் பழிவாங்கி விட்டார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவரான ஜெயந்த தர்மதாசாவுக்கு விசுவாசமானவர்கள் மீது பழிவாங்கும் வகையில் நடந்து கொள்கிறார் ரணதுங்கா.
கிரிக்கெட் வாரியத்தில் நடந்து வரும் முறைகேடுகள் மீடியாக்களை எட்டி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ரணதுங்கா. இதுதான் பிரச்சினை.
என்னை நீக்கி விட்டால் எல்லாவற்றையும் மூடி மறைத்து விடலாம் என்று ரணதுங்கா நினைத்தால் அது மிகப் பெரிய தவறாகும் என்றார் அல்கமா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications