திருவிழாவுக்குச் சென்ற வேன் டிரைவர் வெட்டி கொலை
நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே கோயில் திருவிழாவில் வேன் டிரைவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்ம தேசத்தை சேர்ந்த வேன் டிரைவர் ஆறுமுகம். பாப்பாக்குடி அருகே உள்ள அடைச்சாணி அளிப்பாச்சி சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவுக்கு ஆறுமுகம் நேற்று இரவு சென்றார்.
கோயிலில் இருந்து வெளியே வந்த ஆறுமுகத்திடம் பிரம்மதேசத்தை சேர்ந்த 3 பேர் தகராறு செய்தனர். திடீரென்று ஆறுமுகத்தை சுற்றி வளைத்து தாக்கினர்.
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆறுமுகம் திருவிழாக் கூட்டத்துக்குள் ஓடினார். ஆனால் அந்த கும்பல் தொடர்ந்து விரட்டிச் சென்றது. கருணை ஆறு அருகே ஆறுமுகத்தை ஓட ஓட அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் கதறி துடித்தார். இதை பார்த்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆறுமுகத்தை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆறுமுகம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications