'ஹிண்ட்ராப்' மனோகரன் சிறையில் எம்.எல்.ஏவாக பதவியேற்பு
கோலாலம்பூர்: ஹிண்ட்ராப் தலைவர் மனோகரன், தான் அடைக்கப்பட்டுள்ள முகாமிலேயே எம்.எல்.ஏவாக பதவியேற்கவுள்ளார்.
மனோகரன் உள்ளிட்ட ஐந்து ஹிண்ட்ராப் நிர்வாகிகள் கடந்த ஆண்டு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மனோகரன் ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் ஆவார். ஐந்து பேரும் கமுன்டிங் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மனோகரன் செலாங்கூர் மாகாணத்தில் உள்ள கோடா ஆலம்ஷா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது கட்சியான ஜனநாயக நடவடிக்கைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவை கோரின. ஆனால் அதை மலேசிய அரசு நிராகரித்து விட்டது.
ஆனால் தான் வெளியில் விடப்பட்டால்தான் எம்.எல்.ஏ. பதவியை ஏற்பேன் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார் மனோகரன். இந்த நிைலயில் முகாமிலேயே பதவியேற்றுக் கொள்ள அவர் தீர்மானித்துள்ளார்.
அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் முகாமிலேயே எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவுள்ளனர். இதுகுறித்து செலாங்கூர் மாவட்ட சட்டசபை சபாநாயகர் டெங் சாங்க் கிம் கூறுகையில், மனோகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் முகாமிலேயே பதவியேற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மே 8ம் தேதி அவர் கோடா ஆலம்ஷா தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனோகரனின் மனைவி புஷ்பநீலா கூறுகையில், நான் மகிழ்ச்சியாக உள்ளேன். வெள்ளிக்கிழமை நான் முகாமுக்கு செல்கிறேன். பதவியேற்புக்காக புதிய சூட் மற்றும் டையையும் உடன் எடுத்துச் செல்கிறேன்.
எனது கணவரை மட்டும் அல்ல, உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 பேரையும் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனோகரன் உள்ளிட்ட ஐந்து ஹிண்ட்ராப் நிர்வாகிகளும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications