அரசுக்கு ராமதாஸ் துணை நிற்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: சென்னைக்கு வெளியேயும் சிறப்புப் பொருளாதார மண்டலம் வரக் கூடாது, உள்ளேயும் வரக் கூடாது என்று கூறுவதால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு பயனும் ஏற்படாது. டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் அதைப் புரிந்து கொண்டு அரசுக்குத் துணை நிற்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அமையவுள்ள இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பி அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்து அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தோழமைக் கட்சித் தலைவரான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை மாநகராட்சி பகுதிக்குள் சிறப்பு பொருளாதார மண்டலங்களா? என்று கேட்டு அறிக்கை விடுத்திருக்கிறார்.
தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடைவதற்கான திட்டங்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஒளிவு மறைவற்ற முறையில் அறிவித்திருக்க வேண்டுமென்று கூட அவர் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.
இந்த அரசைப் பொறுத்தவரையில் எதிலுமே ஒளிவுமறைவற்ற இணக்கமான அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதே தவிர எதிலும் மறைமுக நடவடிக்கை கிடையாது என்பதை தொழில் தொடங்க முன் வந்திருப்பவர்களிடமே டாக்டர் ராமதாஸ் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் ஏதோ 300 ஏக்கர், 400 ஏக்கர் பரப்பளவில் அமைவதல்ல. சென்னையில் தகவல் தொழில் நுட்ப மையமாக தற்போது ராஜீவ் காந்தி சாலை தரமணியில் அமைந்து வருகின்றது.
அந்தப் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ, கூட்டுத் துறையிலே டாட்டா ரியாலிட்டி மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தோடு இணைந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உலகத் தரம் வாய்ந்த தகவல் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மற்றொரு நிறுவனமான டிஎல்எப் ஏறத்தாழ 27 ஏக்கர் நிலப்பரப்பில்தான் தகவல் தொழில் நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அதுவும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறு வனமான டிட்கோவுடன் கூட்டுத் துறையிலே செயல்பட உள்ளது. அது மாத்திரமல்ல. இந்த இரண்டு இடங்களுமே விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலமல்ல.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல்களும், சொகுசு மாளிகை குடியிருப்புகளும் வர இருக்கின்றனவா என்று டாக்டர் கேட்கிறார். இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வரவுள்ளன.
அந்த நிறுவனங்களிலே பணியாற்றக் கூடியவர்களுக்கும், வெளியிலிருந்து வரக் கூடியவர்களுக்கும் பயன்பட வேண்டுமென்பதற்காகத்தான் அந்த 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு சில லட்சம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மையமும், தங்கும் விடுதியும், அடுக்குமாடி குடியிருப்புகளும் அமையும்.
அந்த ஒரு சில லட்சம் சதுர அடி போக மற்ற இடங்களில் தொழிற்சாலைகள்தான் அமையும். வெறும் ஓட்டலும், குடியிருப்புகளும் மட்டும் அங்கே ரியல் எஸ்டேட் போல கட்டப்படப் போவதில்லை. இது போலவே மற்றொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் முதலீடு 1500 கோடி ரூபாய். 40 லட்சம் சதுர அடி பரப்பளவில் அந்த மண்டலம் அமையும் போது பல மென் பொருள் நிறுவனங்கள் அங்கே உருவாகும்.
அறிக்கையைத் தொடங்கும்போதே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே ஏற்பளிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அவசரமாகக் கையெழுத்திடப்பட்டு வருகின்றன என்றும் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
உண்மை தெரிந்து ராமதாஸ் பேச வேண்டும்:
டாக்டர் ராமதாசைப் போன்ற விஷயம் புரிந்தவர்கள், 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வர வேண்டுமென்று எண்ணத்தோடு செயல்பட்டு கொண்டிருப்ப வர்கள் இதை போன்றவற்றில் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அல்லது கேட்டுத் தெரிந்து கொண்டு அறிக்கைகளை விடுவது நல்லது.
ஒரு சில வாரங்களுக்குள்ளாக முடிவு செய்யப்பட்டு திமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவசர அவசரமாகப் போடப்படுவதில்லை. கடந்த இரண்டாண்டு காலமாக அறிவிப்புகள் செய்து பல கட்டங்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒவ்வொன்றுக்கும் வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற டெண்டர் முறைகளைப் பின்பற்றி அதன் பிறகு தான் இறுதி செய்யப்படுகிறது. இந்த இரண்டு மண்டலங்களும் கூட அந்த முறையிலே தான் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் எதுவும் அரசு நிலம் அல்ல. மேலும் தரமணியில் உள்ள திரைப்பட நகர் இடத்தையும் கையகப்படுத்தப்போவதில்லை.
மாநிலங்களுக்கு இடையே தொழிற்சாலைகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியைப் பெருக்க கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் தங்களது மாநிலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெருக்க முடியும் என மாநில அரசுகள் முதலீடுகளை ஈர்க்க முட்டி மோதிக் கொண்டிருக்கினறன. இந்த நிலையில், சென்னைக்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வரக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கோருவது வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்!












Click it and Unblock the Notifications