கருணாநிதி அறிவிப்புகள்: ராமதாஸ் சந்தேகம்!
விழுப்புரம்: சிறப்புப் பொருளாதார மண்டலம், தொழில் முதலீடுகள், இத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு என்று முதல்வர் கருணாநிதி கூறிக் கொண்டே போகிறார். அவரது அறிவிப்புகளின்படி இதுவரை 10 லட்சம் பேருக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அப்படி நடந்திருக்கிறதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில், தரமணியில் அரசு நிலத்ைத தனியாருக்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் சிறுதொழில்கள் வளர வேண்டும். இதற்கு சிறு தொழிற் சாலைகளை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும்.
ஆனால் டாடா, பிர்லா, அம்பானி நிறுவனங்கள் சிறிய தொழிற்சாலைகளை தொடங்க முன்வர மாட்டார்கள். நமது மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் தான் இதற்கு முன்வருவார்கள். ஆனால் இவர் களுக்கு உதவ இந்த அரசு தயாராக இல்லை.
பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றெல்லாம் கருணாநிதி அறிவித்து கொண்டே வருகிறார். இதுவரை அவர் வெளியிட்ட அறிவிப்பு களையெல்லாம் கூட்டிப்பார்த்தால் 10 லட்சம் பேருக்காவது வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் முதலீடு, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு களுக்கு ஒரு மரியாதை இருக்கும். சென்னையில் 2 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அறிவித்து, அதற்காக தரமணியில் நிலம் தரப்பட்டுள்ளது. இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது. சலுகை என்ற பெயரில் இந்த நிலத்தை தனியாருக்கு அரசு தாரை வார்த்து கொடுத்துள்ளது.
ஆனால் தரமணியில் பழைய மகாபலிபுரம் சாலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப காரிடர் (ஐடி காரிடர்) பகுதியில் உள்ள தொழில் நுட்ப பூங்காக்களில் நிரப்பப்படாமல் மூன்றரை லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட தளங்கள் இன்னும் காலியாகவே கிடக்கிறது.
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் டாடா போன்ற நிறுவனங்கள் காலியாக கிடக்கும் இந்த கட்டிடங்களுக்கு செல்லாமல் தரமணியில் காலியாக கிடக்கும் அரசு நிலத்திற்கு ஏன் குறிவைக்கிறார்கள்?
ரியல் எஸ்டேட்காரர்களுக்கு அரசு உதவி:
அங்குதான் ஒரு சூட்சுமம் உள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்கா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவதற்கு இந்த அரசு அவர்களுக்கு துணைபோகிறது. அரசு நிலம் என்றால் பொதுநிலம்; பொது மக்களின் நிலம். அதனை தனியாருக்கு எப்படி தாரை வார்க்கலாம்? யாருடைய அனுமதியின் பெயரால் அந்த நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது?
அமைச்சரவையில் மட்டும் முடிவெடுத்தால் போதுமா? சட்டமன்றத்தில் இது பற்றி கட்டாயமாக விவாதிக்க வேண்டும். எனவே இதுவரை அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பற்றியும், அறிவிக்கப்பட்டபடி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரங்களையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
எல்அண்ட்டி நிறுவனத்திற்கு எண்ணூருக்கு அருகே 1500 ஏக்கர் நிலத்தை கப்பல் கட்டும் தளத்திற்காக கொடுத்திருக்கிறார்கள். புதிய தொழிற்சாலைகள் தொடங்க மிக மிக பின்தங்கிய மாவட்டங்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்ஆகிய மாவட்டங்களில் மட்டுமே குவியக்கூடாது.
நீதித்துறையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என சுதர்சனன் நாச்சியப்பன் கமிட்டி அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. நீதித்துறையில், நீதிபதிகள் பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க இக்கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகள் வரவேற்புக்குரியது. இதன் மூலம் சமூக நீதி ஏற்பட வாய்ப்பு உருவாகும். மேலும், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றதிதல் நீதிபதிகள் நியமனத்தில் ஒளிவுமறைவில்லாத நிலைமை உருவாக வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போல, ஒரு நீதிபதியை நியமிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே அவர்கள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு் தெரியப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அவர்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன் பின்னரே அவர்களது நியமனம் உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தேசியஅளவிலான விவாதமும் நடத்தப்பட வேண்டும்.
நாச்சியப்பன் கமிட்டி பரிந்துரை தொடர்பாக சென்னையில் பாமக சார்பில் விவாதம் நடத்தப்படும்.
விலைவாசி உயர்வு:
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசும் காரணம், மாநில அரசும் காரணம். கருப்புப் பணம் ரியல் எஸ்ட்டே சந்தையில் பெருமளவில் புழங்குகிறது. இதுதான் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம். நிதியமைச்சர் அன்பழகன் சொல்வதைப் போல மக்களிடையே காசு அதிகம் புழங்குவதால் விலைவாசிகள் உயரவில்லை.
ரியல் எஸ்டேட் தொழிலில் 25 சதவீத பணிகள்தான் சட்டப்பூர்வமாக நடக்கின்றன. மற்றவை எல்லாம் கருப்புப் பணத்தில்தான் நடக்கின்றன.
பெரும் பணத்துடன் கிராமங்களை முற்றுகையிடும் ரியல் எஸ்டேட் அதிபர்கள், கிராம மக்களிடமிருந்து நிலங்களை குறைந்த விலை கொடுத்து அபகரித்துச் செல்கின்றனர் என்றார் ராமதாஸ்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications