முதல்வருக்கு கருப்புக்கொடி-சேதுராமனுக்கு ஜாமீன்
மதுரை: முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்ட முயன்றபோது கைது செய்யப்பட்ட மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை வமதிக்கப்பட்டதை கண்டித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் மதுரையில் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என டாக்டர் சேதுராமன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சேதுராமன் உள்பட 142 பேரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
தனக்கு ஜாமீன் வழங்க கோரி டாக்டர் சேதுராமன் மதுரை மேலூர் ஜூடிசியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த மாஜிஸ்திரேட் வெங்கடேசன் (பொறுப்பு) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து டாக்டர் சேதுராமன் விடுதலை செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications