நாலந்தா பல்கலை கௌரவ பேராசியராக கலாமுக்கு ஆதரவு

பீகார் மாநிலத்தில் பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த பகுதியில் அதன் நினைவாக புதிய நாலந்தா பல்கலைக்கழகத்தை அம்மாநில அரசு அமைக்கவுள்ளது.
அரசு சார்பற்ற, லாப நோக்கமில்லாத இந்த புதிய தன்னாட்சி பல்கலைக்கழகம், கிழக்காசிய பிராந்தியத்தை சேர்ந்த 16 நாடுகளின் ஒத்துழைப்புடன் தொடங்கப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகளை இந்திய பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான பேராசிரியர் அமர்தியா சென் தலைமையிலான புரவலர் குழு செய்துவருகிறது.
இந்த புரவலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் நடந்தது. இந்தியா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது குழுவின் தலைவர் அமர்த்தியா சென் பேசுகையில், நாலந்தா பல்கலைக்கழக கௌரவ பேராசிரியர் பதவிக்கு அப்துல் கலாமை பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது. சர்வதேச புகழ் வாய்ந்த ஒருவரை இந்த பதவியில் அமர்த்துவதன் மூலமாகத்தான் இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம் நிறைவேறும்.
நாலந்தா பல்கலைக்கழக நிர்வாக விதிமுறைகள், செயல்பாடுகள் குறித்து கொள்கை வரைவுகள் தயாரிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தை விரைவில் தொடங்கி செயல்படுத்துவதற்கு வசதியாக உடனடியாக வேந்தர் மற்றும் பதிவாளர் பதவிகளை நிரப்பவேண்டும்.
தேவையான பேராசிரியர்களை நியமித்தல், ஊதியம், மாணவர் சேர்க்கை மற்றும் கல்விக்கட்டணத்தை தன்னிச்சையாக நிர்ணயிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கவேண்டியது அவசியம்.
பௌத்தவியல், தத்துவயியல், வரலாறு, பன்னாட்டு உறவுகள், நிர்வாகவியல், மொழியியல், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின்கீழ் பல்வேறு பாடத் திட்டங்கள் ஏற்படுத்தப்படுகிறது.
அடுத்தாண்டு இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் மேற்கண்ட துறைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications