கரூர் அருகே குழந்தை பலி-தடுப்பூசி காரணம்?
கரூர்: கரூர் அருகே தடுப்பூசி போடப்பட்ட 4 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. ஆனால், குழந்தை வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கம்மநல்லூரை சேர்ந்த சுரேஷ்-சிகாமணி தம்பதியின் 4 மாத குழந்தை மதன்குமார். லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்தோறும் அளிக்கப்படும் மஞ்சள்காமாலை, கக்குவான் இருமல் தடுப்பூசி கடந்த 30ம் தேதி குழந்தை மதன்குமாருக்கு 2வது டோஸ் கொடுக்கப்பட்டது.
அடுத்த நாள் குழந்தை உடல்நலம் பாதித்ததால் மீண்டும் சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு குழந்தை மதன்குமார் பரிதாபமாக இறந்தான்.
தடுப்பூசி போட்டதில் இருந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தது. பால்கூட குடிக்கவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது குழந்தைக்கு சொட்டு மருத்து கொடுத்தனர்.
குழந்தையின் உடல்நலம் மேலும் மோசமானதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போதும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.
தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் சுப்பிரமணியன், சுகாதார இணை இயக்குனர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து சதாசிவம் கூறுகையில்,
குழந்தைக்கு 30ம் தேதி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த நாள் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதற்கு அடுத்த நாள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகுதான் குழந்தை இறந்துள்ளது. தடுப்பூசி அளித்த டாக்டர் ஜோதிமணியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு முன்னரே குழந்தை வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்திருக்கலாம்.
தடுப்பூசியால் இறந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் காரணம் தெரிந்துவிடும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications