பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார் பிரதீபா பாட்டீல்
டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
பல்துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கிக் கெளரவித்து வருகிறது. பத்ம விருதுகளில் உயரியது பத்ம விபூஷண் விருதாகும்.
இந்த ஆண்டு 13 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 35 பேருக்கு பத்மபூஷண் விருதும், 71 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளது.
விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது. 56 பேர் நேற்று விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் பிரதமர் குஜ்ரால், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில் பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லேவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து நாராயணமூர்த்தி, சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஓபராய் ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
பின்னர் எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் உள்ளிட்ட 14 பேர் பத்மபூஷண் விருதைப் பெற்றனர்.
தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன், டாக்டர் அர்ஜுனன் ராஜசேகரன், மீனாட்சி சித்தரஞ்சன் உள்ளிட்ட 36 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications