கொலையான செயலர் குழந்தைகளின் கல்வி செலவு: சரத் ஏற்பு
ஸ்ரீவைகுண்டம்: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயலாளரின் குழந்தைகளின் கல்விச் செலவுகளை கட்சித் தலைவர் சரத்குமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் செயலாளர் சுயம்புலிங்கம் கடந்த 26ம் தேதி காலையில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று சுயம்புலிங்கத்தின் ஊரான பேட்டைதுரைசாமிபுரத்திற்கு வந்தார். அவரது வீட்டிற்கு சென்ற சரத்குமார், சுயம்புலிங்கத்தின் மனைவி பத்மா மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். மூத்த மகள் நந்தினியை தூக்கி முத்தமிட்டார். பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையை பார்த்து கண் கலங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், சுயம்புலிங்கத்தின் மறைவு வருத்தமடைய செய்கிறது. அவர் இறந்த அன்று நான் கர்நாடகாவில் இருந்ததால் வர முடியாமல் போய்விட்டது. இந்த கொலை சம்பவத்தில் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் துடிப்பாகவும், சிறப்பாகவும் செயல்பட்டவர் சுயம்புலிங்கம்.
அவரது பிரிவால் வாடும் மனைவி பத்மாவுக்கு வேலை வாங்கி கொடுக்க அ.இ.ச.ம.க. முயற்சி செய்யும். அவர்களது குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்று கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறினார் சரத்குமார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications