ரூ.300 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் டிஸ்மிஸ்
திருச்சி: திருச்சியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சார் பதிவாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்ப திவாளராக பணியற்றியவர் தேவராஜ்.
சிறுவாச்சூர் ஜெயராமன் என்பவரது பத்திரத்தை பதிவு செய்ய ரூ.300 லஞ்சம் கேட்டார். இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஜெயராமன் புகார் செய்தார்.
இதையடுத்து ஜெயராமனிடம் லஞ்ச பணத்தை வாங்கும்போது தேவராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தேவராஜ் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தல் தாக்கல் செய்தனர். மேலும் அந்த ஆதாரங்கள் திருச்சி ஒழுங்கு முறை ஆணையத்திலும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தேவராஜ் மீது லஞ்ச வழக்கு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து சார் பதிவாளர் பணியில் இருந்து தேவராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications