வழக்கு தொடர்ந்தவரை மிரட்டிய போலி நீதிபதி கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வழக்கு தொடர்ந்தவரை வீடு தேடிச் சென்று மிரட்டிய, போலி நீதிபதியைப் போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜா நகரைச் சேர்ந்தவர் அலமேலு. இவர் தனது மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இவரது வீட்டுக்கு முத்து என்பவர் வந்து தன்னை ஒரு நீதிபதி என கூறிக் கொண்டார். பின்னர் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அலமேலு போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார், முத்துவிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் போலி நீதிபதி எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications